என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "warn"

    • தகவலின் பேரில் கோட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
    • பட்டாசு தயாரிக்கும் மருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை கோட்டூர் பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதாக கோட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் கோட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு பட்டாசு தயாரித்து கொண்டிருந்த கோட்டூர் பாறை வீதியை சேர்ந்த சுப்பிரமணியம், நாகராஜ், மணி, மணிவேல், பேச்சிமுத்து , கிருஷ்ணசாமி, மகாலிங்கம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், இவர்கள் 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளாக பனை ஓலையில் ஓலைவெடி, திருவிழாவுக்கு பானம் விடும் பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர். இவர்கள் அதற்கான உரிமத்தை கடந்த ஏப்ரல் மாதம் புதுப்பித்து இருக்கின்றனர். இந்த வருடத்திற்கான உரிமத்தை புதுப்பிக்காமல் இருப்பது தெரியவந்தது.

    அனுமதியின்றி கடந்த சில நாட்களாக பட்டாசு தயாரித்தாக தெரிகிறது. அவர்களிடம் இருந்து பட்டாசு தயாரிக்கும் மருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் முறையான உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்குமாறு அறிவுறுத்தினர்.

    ×