search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vocational Class"

    • தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ், 67 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
    • மத்திய அரசு தொழில்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    திருப்பூர்,

    பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்கள், வேலைக்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், வழக்கமான பாடத்திட்டத்துடன், தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ், 67 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டது.பல்திறன் தொழில்நுட்பம் என்ற பிரிவில் விவசாயம், எலக்ட்ரானிக் வயரிங் மற்றும் ஸ்விட்சிங் வேலை, கார்பெண்டர், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

    ஆட்டோமோட்டிவ் என்ற பிரிவில் கார், மோட்டார் சைக்கிள் என்ஜின் மற்றும் அவற்றை பழுதுபார்க்கும் முறை குறித்து அத்தனை நுட்பங்களும் கற்றுத் தரப்படும். ஆனால், தொழிற்கல்வி பாடங்களை நடப்பாண்டு முதல் நிறுத்தி விடுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.நடப்பாண்டு முதல் 9ம் வகுப்பில் இதற்காக புதிதாக மாணவர்களை சேர்க்க வேண்டாம் எனவும், ஏற்கனவே பயின்று வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குபிளஸ் 2 வகுப்பு வரை தொடரவும் அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-

    மத்திய அரசு தொழில்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தொழில் கல்வியானது6 பிரிவுகளின் கீழ் 12 பாடங்களாக செயல்பாட்டில் உள்ளது.எனவே 9,10-ம் வகுப்புகளுக்கு தொழில் பயிற்சி வகுப்புகள் நிறுத்தியதால் எவ்வித பாதிப்பும் இல்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தயாராக கூடுதல் நேரம் கிடைக்கும். இதில் பெறப்படும் சான்றிதழ்களை அவர்கள் சுய தொழில் தொடங்கவும், வங்கிக்கடன் பெறவும் பயன்படுத்தலாம்.எனினும் அதுமட்டுமே போதுமானதாக இல்லை. அதேசமயம் இடை நிற்றல் அதிகரிக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×