search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishwa Hindu Parishad Institute"

    • கிராமக் கோவில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி மாத ஊக்கத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.
    • அனைத்து கிராமக் கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் நிறுவனரும், கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலருமான எஸ். வேதாந்தம், தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத், மாநில தலைவரும், கிராமக்கோவில் பூசாரிகள் பேரவையின் அறங்காவலருமான ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    2021-ம் ஆண்டு சட்ட சபை பொதுத் தேர்லையொட்டி, கிராமக் கோவில் பூசாரிகள் பேரவையின் மாநிலப் பொறுப்பாளர்கள் எழுத்துமூலமாக கோரிக்கைகளை அளித்தனர். அதை ஏற்றுக் கொண்ட இப்போதைய ஆளும் தி.மு.க., தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 406-வது வாக்குறுதியாக கிராமக் கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், இன்றுவரை அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை. எனவே, கிராமக் கோவில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி மாத ஊக்கத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.

    செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் கிராமக்கோவில் பூசாரிகள் நலவாரியத்தை சீர்படுத்தி, விரைவாக செயல்படுத்த வேண்டும். அனைத்து கிராமக் கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

    ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் மறைவுக்கு பிறகு, அவர்களது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 20-ந் தேதி நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடை பெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, கிராமக்கோவில் பூசாரிகள், அருள்வாக்கு அருள்வோர் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×