search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villakku Pooja"

    • விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • இன்று மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜையும், அதை தொடர்ந்து 9மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகே உள்ள இடை யற்காடு கிராமத்தில் முத்தா ரம்மன் கோவில் கொடைவிழா நேற்று மாலை 6 மணிக்கு திரு விளக்கு பூஜையுடன் தொடங்கியது.

    திருவிளக்கு பூஜை

    கொடை விழாவை முன்னிட்டு 308 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்து விளக்கு பூஜையை கோவை தொழிலதிபர் அஜித்ராஜ், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் கோவை மேற்கு மாவட்ட நாடார் சங்க செயலாளர் பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நடை பெற்றது. இன்று மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜையும், அதை தொடர்ந்து 9மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    கொடைவிழா

    நாளை (செவ்வாய்க் கிழமை )கொடை விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு புனித தீர்த்தம் எடுக்க செல்லுதல், 10 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்ஷண ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபுர கலச பூஜை, கோபுர அபிஷேகம், அம்மனுக்கு கலக அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பகல் 1மணிக்கு மதிய பூஜை நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு நையாண்டி மேளம், முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கரகாட்டம், வில்லிசை நிகழ்ச்சியும், செண்டை மேளம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    இரவு 12மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 2.30 மணிக்கு சாமக்கொடை நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து உற்சவர் முத்தாரம்மன் வான வேடிக்கையுடன் சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பக்தர்கள், பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்து அம்மனை வழிபடு வார்கள். அன்று காலை, மாலை, இரவு 3 வேளையும் , வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை )மதியம் 12மணிக்கு மதிய கொடையும், இரவு 7 மணிக்கு ஆடல், பாடல் இசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    ×