search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village Administrative Office"

    • கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து தங்களுக்கான கோரிக்கைகளை கூறி அதன் மூலம் பயன் அடைந்து வந்தனர்.
    • வயது முதிர்ந்த முதியவர்கள் கூட ஒரு ஆட்டோ பிடித்து நேரடியாக வந்து கிராம நிர்வாக அதிகாரியை எளிதில் சந்தித்து செல்வர்

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆட்டுத்தொட்டி பஸ் ஸ்டாப் அருகே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகம் இங்கு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பலர் இங்கு வந்து கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து தங்களுக்கான கோரிக்கைகளை கூறி அதன் மூலம் பயன் அடைந்து வந்தனர். இந்நிலையில் அந்த அலுவலகம் இருக்கும் இடத்தல் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக கிராம நிர்வாகம் அலுவலகம் அந்த இடத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு சுந்தராபுரம்-மதுக்கரை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் அமைந்துள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வந்ததாக தற்போது அறிவிப்பு வெளி வந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, போத்தனூர் ஆட்டுத்தொட்டி என்பது இப்பகுதியின் மையப்பகுதியாகும். அனைத்து பொதுமக்களும் எளிமையாக வந்து செல்லக்கூடிய இடம் ஆகும்.

    வயது முதிர்ந்த முதியவர்கள் கூட ஒரு ஆட்டோ பிடித்து நேரடியாக வந்து கிராம நிர்வாக அதிகாரியை எளிதில் சந்தித்து செல்வர்.

    ஆனால் தற்போது மாற்றப்பட்டுள்ள இடம் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்தது வெகு தூரமாகும். ஒவ்வொருவரும் முயற்சி எடுத்து 6 முதல் 7 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. பொதுவாக கிராம நிர்வாக அலுவலகம் அந்தந்த பகுதியில் அமைய வேண்டும். ஆனால் நடைமுறைக்கு மாறாக ஏதோ ஒரு இடத்தில் உருவாக்கினால் பொதுமக்கள் எப்படி செல்வது. இதனை வன்மையா க கண்டிக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு இதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து அதிகாரி கூறும்போது, இதுகாலம் வரையில் போத்தனூர் சாரதா மில் ரோடு ஆட்டு தொட்டியில் செயல்பட்டு வந்தோம். எங்களைத் தேடி வந்தவர்களுக்கு மக்கள் பணி ஆற்றினோம். ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகம் அலுவலகத்தை இடம் மாற்றக் கோரி இருக்கிறது. ஒருவேளை மாவட்ட நிர்வாகம் அதே பகுதியில் இடம் அமைத்துக் கொடுத்தால் நாங்கள் செயல்பட தயார். வழக்கம்போல் மக்கள் பணி ஆற்றுவோம். இதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் பொது மக்களை பந்தாட வேண்டாம். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு பணியாற்றுவதற்கு தான் உள்ளது.

    அதைவிடுத்து அவர்க ளை அலைக்கழிக்க தேவையில்லை. இதனை மாவட்ட நிர்வாகம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அலைக்கழிக்கும் செயலில் ஈடுபட்டால் அதனை வன்மையாக கண்டிப்போம் என்றனர். 

    ×