என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vembakkam Govt Hospital"

    • பெண் டாக்டர் பெருமாள் அழைத்து சென்ற முதியவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
    • பெருமாள் சிகிச்சை அளித்த பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள திருப்பனமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 30). விவசாய கூலி தொழிலாளி.

    இவரது உறவினரான 80 வயது முதியவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பெருமாள் முதியவரை சிகிச்சைக்காக வெம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

    ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவில் பெண் டாக்டர் ஒருவர் பணியில் இருந்தார்.

    அந்தப் பெண் டாக்டர் பெருமாள் அழைத்து சென்ற முதியவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.

    அந்த நேரத்தில் பெருமாள் சிகிச்சை அளித்த பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் அலறி கூச்சலிட்டார். அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாலியல் தொல்லை கொடுத்த பெருமாளை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இதுகுறித்து தலைமை மருத்துவர் சுரேஷ்பாபு பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பெருமாளை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் பெண் டாக்டரிடம் அவர் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பெருமாள் மீது மருத்துவர்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் வெம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×