என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle overturned in the middle of the road"

    • பந்தலூர் தாலுகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. விலக்கலாடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நடைபாதை மூழ்கியது.
    • அத்திசால் பகுதியில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

    ஊட்டி:

    பந்தலூர் தாலுகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. விலக்கலாடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நடைபாதை மூழ்கியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகரில் மின்கம்பங்கள் சாய்ந்தன.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா அத்திசால் பகுதியில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இந்தநிலையில் சேரம்பாடி பள்ளிகுன்னுவில் மண்சரிவு ஏற்பட்டது.

    மேலும் விநாயகர் கோவில் அருகே மண்சரிவால் ஓட்டல் சேதமடைந்தது. தொடர் மழையால் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மேடான பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    மீண்டும் மண்சரிவு ஏற்பட்டால் கீழ்பகுதியில் உள்ள கடைகள் இடியும் நிலை காணப்படுகிறது. எனவே, சம்பந்தபட்ட துறையினர் அந்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×