search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varumun Kapom project"

    • வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தொடர்ந்து 2 முகாம்கள் நடத்தப்படும்.
    • 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் திருப்பூர் மண்டலம் - 2, வார்டு19, திருநீலகண்டபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் முன்னிலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமை மேயர் தொடங்கி வைத்து பேசியதாவது :- பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய்கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்" செயல்படும்.

    இத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து 2 முகாம்கள் நடத்தப்படும். இம்முகாம்கள் 26.11.2022 அன்று 1ம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-24, ஈபி காலனி, அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 3:12.2022 அன்று 4ம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்- 40 இடுவம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சனிக்கிழமை தோறும் சிறப்பாக நடைபெறும்.

    பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி சுகாதாரமாக வாழ வாழ்த்துகிறேன் என்றார். தொடர்ந்து, 7 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவ மருந்து பெட்டகம், 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் துணை மேயர் பாலசுப்ரமணியம், சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், மாநகர நல அலுவலர் அலுவலர் கௌரி சரவணன், மண்டல தலைவர் கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×