என் மலர்
நீங்கள் தேடியது "Varalakshmi fast and worship"
- வரலட்சுமி விரத சிறப்பு வழிபாடு நடந்தது.
- மீனாட்சி அம்மன் கோவில் புகழ் ரதி சிலையும் இடம்பெற்றிருந்தது.
மதுரை
மதுரை குட்செட் தெருவை சேர்ந்த சூரிய கலா-செந்தில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து இந்த ஆண்டிற்கான வரலட்சுமி பூஜையை தங்களது வீட்டில் சிறப்பாக செய்தனர். உலக நலனுக்காகவும், பெண்கள் நலனுக்காகவும், அனைத்து குடும்ப நலனுக்காகவும் அவர்கள் வழிபட்டனர். தென்னை ஓலை பின்னணியில் லட்சுமி தேவி தாயார் அருள் பாலித்தார்.
ஒவ்வொரு நாள் முடிவிலும் வழிபாட்டிற்கு பின்னர் சூரியகலா ஓவியம் ஆக்கப்பட்ட சிறப்பு கல் சிற்பங்களை பார்வையாளர்களுக்காகவும், பக்தர்களுக்கா கவும் தனது வீட்டில் காட்சிப்படுத்தினார். இதில் சிறப்பம்சமாக பழங்கால கேரளா ஓவிய முறையில் வரையப்பட்ட கஜ சம்ஹார மூர்த்தியும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புகழ் ரதி சிலையும் இடம்பெற்றிருந்தது. பக்தர்களும் நண்பர்களும் இந்த ஆண்டும் சாமியை தரிசித்தும் கலையை ரசித்தும் சில ஓவியங்களை பக்தியுடன் வாங்கி சென்றனர்.






