என் மலர்

  நீங்கள் தேடியது "Vaccination Drive"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
  • கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள், கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன. இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பூஸ்டர் டோஸ் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 75 நாட்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

  இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வரை 199 கோடியே 87 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று 200 கோடி என்ற மைல்கல்லை கடந்தது.

  இந்த சாதனையை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியா மீண்டும் வரலாறு படைத்திருப்பதாக கூறிய அவர், தடுப்பூசி இயக்கத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்வதற்கு பங்களித்தவர்களை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

  இந்த சாதனைக்காக பொதுமக்களுக்கு மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என குறிப்பிட்டுள்ளார்.

  மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, வயதுவந்தவர்களில் 98 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 90 சதவீதம் பேர் இரண்டு தவணையும் செலுத்தி உள்ளனர். 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 82 சதவீதம் பேர் முதல் டோஸ் செலுத்த உள்ளனர். 68 சதவீதம் பேர் 2 தவணையும் செலுத்தி உள்ளனர். 12-14 வயதினரில் 81 சதவீதம் பேர் முதல் தவணையும், 56 சதவீதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க புதுமையான வழிகளை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
  புதுடெல்லி:

  கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது.

  தற்போது கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. 3-வது அலை வராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

  சமீபத்தில் 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை அடைந்து இந்தியா புதிய சாதனை படைத்தது. இதுவரை 107 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. விரைவில் 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  தடுப்பூசி செலுத்தும் பணி

  இந்த நிலையில் சில மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவிலேயே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

  ஜார்க்கண்ட், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மராட்டியம், நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 48 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு 50 சதவீதத்துக்கு குறைவாகவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2-வது டோஸ் தடுப்பூசியும் குறைந்த அளவிலேயே போடப்பட்டு இருப்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

  நாகாலாந்தில் உள்ள கிபிரே மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 16.1 சதவீதம் பேருக்கே முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அவுரங்காபாத்தில் (மராட்டியம்) 46.5 சதவீதமும், தியோகரில் (ஜார்க்கண்ட்) 44.2 சதவீதமும் போடப்பட்டுள்ளது. இது மாதிரி 48 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு குறைவான அளவில் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

  இந்த மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 48 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.  காணொலி வாயிலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர்களும், அந்தந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

  இந்த ஆலோசனைக்  கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க புதுமையான வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களை கேட்டுக்கொண்டார். 

  “கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வைப் பரப்பவும், வதந்திகளை எதிர்த்துப் போராடவும் உள்ளூர் மதத் தலைவர்களின் உதவியைப் பெறலாம். இதுவரை தடுப்பூசி மையங்களுக்கு மக்களை அழைத்து வந்து தடுப்பூசி போடப்பட்டது. இப்போது வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவதற்கான நேரம் வந்துவிட்டது.  தடுப்பூசி போடாதவர்களுக்கு முதல் டோஸ் செலுத்துவதை உறுதி செய்யுங்கள். அதே கவனத்தை 2வது டோஸ் செலுத்துவதிலும் செலுத்துங்கள்” என பிரதமர் அறிவுறுத்தினார்.

  ×