search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "usual today"

    • மதுரை - புனலூர் ரெயில் இன்று வழக்கம் போல் இயங்கப்படுகிறது.
    • இந்த தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    திருவனந்தபுரம் கோட்டத்தில் இரணியல் அருகே, இரட்டை ரெயில் பாதை பணிக்காக ஒரு சில பாலங்களை அகலப்படுத்தும் பணி நடப்பதாக இருந்தது. மதுரையில் இருந்து இன்று (26-ந் தேதி) புறப்பட வேண்டிய புனலூர் விரைவு ரெயில் மற்றும் புனலூரில் இருந்து நாளை (27-ந் தேதி) புறப்பட வேண்டிய மதுரை ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தற்போது அங்கு பாலம் அகலப்படுத்தும் பணி நடக்கவில்லை. எனவே மதுரை-புனலூர் விரைவு ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் வழக்கம் போல இயங்கும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×