என் மலர்

  நீங்கள் தேடியது "US Open 2018"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸ்க்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. #USOpen #SerenaWilliams
  வாஷிங்டன் :

  நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

  இந்த போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார். அவர் 3 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

  முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.

  2-வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்து செரினாவின் புள்ளியை குறைத்தார்.

  3-வதாக நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார், என்னுடையை புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர் என கோபத்தில் நடுவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.

  இந்நிலையில், செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம் அவருக்கு அபராதம் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  நடுவரை நோக்கி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு ரூ.7 லட்சத்து 21 ஆயிரம் (10 ஆயிரம் அமெரிக்க டாலர்), பயிற்சியார் சைகை செய்ததற்கு ரூ. 2 லட்சத்து 88 ஆயிரம் (4 ஆயிரம் அமெரிக்க டாலர்), டென்னிஸ் ராக்கெட்டை வீசி எரிந்ததற்கு ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் (3 ஆயிரம் அமெரிக்க டாலர்) என மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.  அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறிய செரினா வில்லியம்ஸ்க்கு பரிசுத்தொகையாக ரூ.13 கோடி தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen #SerenaWilliams
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் டெல் போட்ரோ, ஜான் இஸ்னெர் காலிறுதிக்கு முன்னேறினார்கள். #USOpen2018
  கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்கா ஓபன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் ஜுயான் மார்ட்டின் டெல் போட்ரோ, 20-ம் நிலை வீரரான குரோசியாவின் போர்னா கோரிச்சை எதிர் கொண்டார். இதில் எந்தவித போராட்டமும் இன்றி 6-4, 6-3, 6-1 நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு ஆட்டத்தில் 11-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னெர் 25-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை எதிர்கொண்டார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் என்பது போல் ஈடுகொடுத்து விளைாடினார்கள். இதனால் ஐந்து செட் வரை ஆட்டம் நீடித்தது. இறுதியில் இஸ்னெர் 3-6, 6-3, 6-4, 3-6, 6-2 என வெற்றி பெற்றார்.

  காலிறுதிகளில் நடால் - தியெம், டெல் போட்ரோ - இஸ்னெர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபனில் போட்டியின்போது சட்டையை கழற்றிய பிரான்ஸ் வீராங்கனைக்கு நடுவர் அபராதம் விதித்தார். #USOpen2018
  அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ஒரு ஆட்டத்தின் பிரான்ஸ் வீராங்கனை அலிஸ் கார்னெட் ஸ்வீடனின் ஜோகன்னா லார்சனை எதிர்கொண்டார்.

  இந்த போட்டியின்போது அலிஸ் கார்னெட் ஹீட் தாங்க முடியாமல் அடிக்கடி ரெஸ்ட் எடுத்து மெடிக்கல் ட்ரீட்மென்ட் எடுத்தார். அப்போது தன்னையறியாமல் தனது டிஷர்ட்டை மாற்றி அணிந்து விளையாட சென்றார்.

  விளையாடிக் கொண்டிருக்கும்போது டிஷர்ட் மாற்றி அணிந்திருப்பது அலிஸ் கார்னெட்டிற்கு தெரிய வந்தது. உடனடியாக மைதானதிற்குள் வைத்து, தனது ராக்கெட்டை இரண்டு காலிற்கு இடையில் வைத்துக் கொண்டு ஷர்ட்டை மாற்றினார்.

  இது டென்னிஸ் விதிமுறைக்கு எதிரானது என்று நடுவர் அவருக்கு அபராதம் விதித்தார். நடுவரின் முடிவிற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த ஆட்டத்தில் அலிஸ் கார்னெட் 6-4, 3-6, 2-6 எனத் தோல்வியடைந்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் தொடரில் கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் ஐந்து வீரர்கள் ரிட்டையர்டு மூலம் வெளியேறினார்கள். #USOpen2018
  கிராண்ட் ஸ்லாம் பதக்கத்திற்கான இந்த ஆண்டின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்றுமுன்தினம் தொடங்கியது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து 2-வது சுற்று ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றன.

  அமெரிக்காவில தற்போது கடுமையாக வெப்பம் நிலவி வருகிறது. கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்று செட்டுகளை கைப்பற்றினால்தான் வெற்றி பெற முடியும். இதனால் பெரும்பாலான ஆட்டங்கள் நான்கு அல்லது ஐந்து செட்கள் வரை நீடிக்கிறது. இதனால் இரண்டு மணி நேர்த்திற்கு மேல் எதிர் வீரர்களுடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.

  ஆனால் கடுமையான வெப்பம் நிலவுவதால் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அடிக்கடி ஐஸ் கட்டியை சுற்றிய துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு வெப்பத்தை தணிக்கிறார்கள். சிலரால் வெப்பத்தை தாங்க முடியாமல் ஆட்டத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

  இப்படி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது ஐந்து வீரர்கள் ஆட்டத்தில் இருந்து ரிட்டையர்டு மூலம் வெளியேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் 7-ம் நிலை வீருரான மரின் சிலிச்சை எதிர்த்து ருமேனியா வீரர் மேரியஸ் காபில் விளையாடினார். இவர் முதல் இரண்டு செட்டுகளையும் 5-7, 1-6 என இழந்திருந்தார். 3-வது செட்டில் 1-1 என சமநிலையில் இருக்கும்போது போட்டியில் இருந்து வெளியேறினார்.

  23-ம் நிலை வீரரான தென்கொரியாவைச் சேர்த்த ஹியியோன் சங்கை எதிர்த்து லித்துனியாவின் ரிச்சார்ட்ஸ் பெராங்கிஸ் விளையாடினார். இவர் 1-2 என பின்தங்கிய நிலையில் 4-வது செட்டை எதிர்கொண்டார். அதில் 0-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது வெளியேறினார்.


  காபில்

  இத்தாலி வீரர் ஸ்டெபனோ டிராவாக்லியா 1-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது 4-வது செட்டில் வெளியேறினார்.

  செர்பியா வீரர் லாஸ்லோ டேர் 1-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது 4-வது செட்டில் வெளியேறினார். நம்பர் ஒன் வீரரான நடாலை எதிர்த்து விளையாடிய டேவிட் பெர்ரர் 2-வது செட்டிலேயே வெளியேறினார்.

  கனடா வீரர் பெலிக்ஸ் ஆகெர் அலியாசிம் 1-1 என சமநிலையில் இருக்கும்போது 3-வது செட்டோடு வெளியேறினார்.

  வீரர்கள் வெப்பம் தாங்க முடியாமல் பாதிலேயே வெளியேறியது அமெரிக்கா ஓபன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ், வீனஸ், ஸ்டீபன்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். #USOpen2018
  கிராண்ட் ஸ்லாம் டென்னிஸின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்று தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் எம் எலினேட்டை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஜ் 6-4, 6-0 என எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

  மற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீராங்கனையான ஜூலியா ஜார்ஜஸ் 6-2, 6(5)-7(7), 6-2 என கலின்ஸ்கயாவை வீழ்த்தினார். 8-ம் நிலை வீராங்கனை பிளிஸ்கோவோ 6-4, 7(7)-6)4) என வெற்றி பெற்றார். 16-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 7-5, 6-3 என வெற்றி பெற்றார். 3-ம் நிலை வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஸ்டீபன்ஸ் 6-1, 7-5 என வெற்றி பெற்றார்.

  7-ம் நிலை வீராங்கனை ஸ்விடோலினா, 15-ம் நிலை வீராங்கனை மெர்ட்டென்ஸ், 12-ம் நிலை வீராங்கனை முகுருசா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் பிரிவில் ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), எஸ்தோனியா வீராங்கனை கைய் கனேபியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #USOpen2018 #SimonaHalep #KaiaKanepi
  நியூயார்க்:

  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), எஸ்தோனியா வீராங்கனை கைய் கனேபியை சந்தித்தார். மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிமோனா ஹாலெப் 2-6, 4-6 என்ற நேர்செட்டில் கனேபியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான சிமோனா ஹாலெப் கடந்த ஆண்டும் அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் சுற்றுடன் நடையை கட்டி இருந்தார்.  மற்ற ஆட்டங்களில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வெரா லாப்கோ (பெலாரஸ்), கமேலி பெகு (ருமேனியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் ஜாக் சோக் (அமெரிக்கா), கரென் காச்சனோவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.  #USOpen2018 #SimonaHalep #KaiaKanepi
  ×