search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஓபன்- போட்டியின்போது சட்டையை கழற்றிய வீராங்கனைக்கு அபராதம்
    X

    அமெரிக்க ஓபன்- போட்டியின்போது சட்டையை கழற்றிய வீராங்கனைக்கு அபராதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அமெரிக்க ஓபனில் போட்டியின்போது சட்டையை கழற்றிய பிரான்ஸ் வீராங்கனைக்கு நடுவர் அபராதம் விதித்தார். #USOpen2018
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ஒரு ஆட்டத்தின் பிரான்ஸ் வீராங்கனை அலிஸ் கார்னெட் ஸ்வீடனின் ஜோகன்னா லார்சனை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின்போது அலிஸ் கார்னெட் ஹீட் தாங்க முடியாமல் அடிக்கடி ரெஸ்ட் எடுத்து மெடிக்கல் ட்ரீட்மென்ட் எடுத்தார். அப்போது தன்னையறியாமல் தனது டிஷர்ட்டை மாற்றி அணிந்து விளையாட சென்றார்.

    விளையாடிக் கொண்டிருக்கும்போது டிஷர்ட் மாற்றி அணிந்திருப்பது அலிஸ் கார்னெட்டிற்கு தெரிய வந்தது. உடனடியாக மைதானதிற்குள் வைத்து, தனது ராக்கெட்டை இரண்டு காலிற்கு இடையில் வைத்துக் கொண்டு ஷர்ட்டை மாற்றினார்.

    இது டென்னிஸ் விதிமுறைக்கு எதிரானது என்று நடுவர் அவருக்கு அபராதம் விதித்தார். நடுவரின் முடிவிற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த ஆட்டத்தில் அலிஸ் கார்னெட் 6-4, 3-6, 2-6 எனத் தோல்வியடைந்தார்.
    Next Story
    ×