search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிட் பெர்ரர்
    X
    டேவிட் பெர்ரர்

    அமெரிக்கா ஓபன்- வெப்பம் தாங்க முடியாமல் ஐந்து வீரர்கள் ரிட்டையர்டு

    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் தொடரில் கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் ஐந்து வீரர்கள் ரிட்டையர்டு மூலம் வெளியேறினார்கள். #USOpen2018
    கிராண்ட் ஸ்லாம் பதக்கத்திற்கான இந்த ஆண்டின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்றுமுன்தினம் தொடங்கியது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து 2-வது சுற்று ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றன.

    அமெரிக்காவில தற்போது கடுமையாக வெப்பம் நிலவி வருகிறது. கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்று செட்டுகளை கைப்பற்றினால்தான் வெற்றி பெற முடியும். இதனால் பெரும்பாலான ஆட்டங்கள் நான்கு அல்லது ஐந்து செட்கள் வரை நீடிக்கிறது. இதனால் இரண்டு மணி நேர்த்திற்கு மேல் எதிர் வீரர்களுடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.

    ஆனால் கடுமையான வெப்பம் நிலவுவதால் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அடிக்கடி ஐஸ் கட்டியை சுற்றிய துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு வெப்பத்தை தணிக்கிறார்கள். சிலரால் வெப்பத்தை தாங்க முடியாமல் ஆட்டத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

    இப்படி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது ஐந்து வீரர்கள் ஆட்டத்தில் இருந்து ரிட்டையர்டு மூலம் வெளியேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் 7-ம் நிலை வீருரான மரின் சிலிச்சை எதிர்த்து ருமேனியா வீரர் மேரியஸ் காபில் விளையாடினார். இவர் முதல் இரண்டு செட்டுகளையும் 5-7, 1-6 என இழந்திருந்தார். 3-வது செட்டில் 1-1 என சமநிலையில் இருக்கும்போது போட்டியில் இருந்து வெளியேறினார்.

    23-ம் நிலை வீரரான தென்கொரியாவைச் சேர்த்த ஹியியோன் சங்கை எதிர்த்து லித்துனியாவின் ரிச்சார்ட்ஸ் பெராங்கிஸ் விளையாடினார். இவர் 1-2 என பின்தங்கிய நிலையில் 4-வது செட்டை எதிர்கொண்டார். அதில் 0-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது வெளியேறினார்.


    காபில்

    இத்தாலி வீரர் ஸ்டெபனோ டிராவாக்லியா 1-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது 4-வது செட்டில் வெளியேறினார்.

    செர்பியா வீரர் லாஸ்லோ டேர் 1-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது 4-வது செட்டில் வெளியேறினார். நம்பர் ஒன் வீரரான நடாலை எதிர்த்து விளையாடிய டேவிட் பெர்ரர் 2-வது செட்டிலேயே வெளியேறினார்.

    கனடா வீரர் பெலிக்ஸ் ஆகெர் அலியாசிம் 1-1 என சமநிலையில் இருக்கும்போது 3-வது செட்டோடு வெளியேறினார்.

    வீரர்கள் வெப்பம் தாங்க முடியாமல் பாதிலேயே வெளியேறியது அமெரிக்கா ஓபன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×