என் மலர்

  நீங்கள் தேடியது "US Defence Secretary"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். #USDefenceSecretary #JimMattisResigns
  வாஷிங்டன்:

  அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி வகித்து வந்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பல அதிகாரிகள் ராஜினாமா செய்தனர்.

  இந்நிலையில், ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் (வயது 68) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அதிபர் டிரம்புக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பதவி விலக இதுவே சரியான தருணம் என்றும், அதிபர் டிரம்ப் தகுதியான ஒரு தலைவரை ராணுவ மந்திரியாக நியமிப்பதற்கு ஏதுவாக பதவி விலகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

  தனது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும், இந்த இடைப்பட்ட காலம் புதிய மந்திரியை தேர்வு செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறுநாளே, ராணுவ மந்திரி பதவியில் இருந்து ஜிம் மேட்டிஸ் பதவி விலகியிருக்கிறார். எனவே, டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக அவர் பதவி விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

  ஜிம் மேட்டிஸ் ராஜினாமா கடிதம் அனுப்பியதையடுத்து, பிப்ரவரி மாதம் அவர் ஓய்வு பெற உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் ஜிம் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவரது பதவிக்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் பாராட்டியுள்ளார். #USDefenceSecretary #JimMattisResigns

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடியின் கடன் அபாயம் குறித்த உரையை அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் வெகுவாக பாராட்டி உள்ளார்.
  வாஷிங்டன்:

  சிங்கப்பூரில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு நடந்த 17-வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசினார். அப்போது அவர், சில நாடுகள் மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் கடன் கொடுத்து பெரும் சுமையை ஏற்றி வைப்பதாக விமர்சித்தார். அதற்கு பதிலாக, அந்த நாடுகளை வளர்த்து விட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

  இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், பிரதமரின் இந்த உரையை தற்போது வெகுவாக பாராட்டி உள்ளார். இது குறித்து சிங்கப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடன் பெறுவதன் அபாயம் குறித்து பிரதமர் மோடி மிகவும் நல்ல கருத்தை எடுத்துரைத்தார். இது மிகவும் உண்மை. அத்துடன் புதிய செயல்திட்டத்தை வகுப்பதற்கும் வழிவகுத்து இருக்கிறது’ என்றார்.

  மோடியின் உரையை கேட்டுவிட்டு அறைக்கு சென்ற பின் இரவில் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருந்ததாக கூறிய ஜேம்ஸ் மேட்டிஸ், இதுபோன்ற கடன்களால் உங்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை இழந்துவிடுவீர்கள் என்றும் கூறினார். அந்த உரைக்காக இந்தியாவை (மோடி) நினைவு கூருகிறேன் என்றும், அது மூத்த ஒருவரின் உரையை கேட்பதைப்போல இருந்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 
  ×