என் மலர்

  நீங்கள் தேடியது "uk high court"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பிரிட்டன் ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்த ஜாமீன் மனு ஜூன் 11-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
  லண்டன்:

  மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி(48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.   
   
  லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் லண்டன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். 

  அவரது ஜாமீன் மனு 3 முறை நிராகரிக்கப்பட்டது. அவரது சிறைக்காவலும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. கடைசியாக அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தபோது, மே 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து வழக்கின் முழுமையான விசாரணை மே 30-ம் தேதி நடைபெறும் என அறிவித்தது. 

  இதற்கிடையே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் வழக்கு நடைபெறுகிறது. நிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

  இந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று விசாரணை தொடங்கியது. அப்போது நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். நிரவ் மோடி இந்தியாவில் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? என்ற தகவலை இந்திய அரசு 14 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி நீதிபதி கேட்டுக்கொண்டார்.

  இதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை ஜூன் 27-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில், நிரவ் மோடியை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி பிரிட்டன் ஐகோர்ட்டில் அவரது வழக்கறிஞர் இன்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீது ஜூன் 11-ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு லண்டன் ஐகோர்ட்டில் ஜூலை 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #VijayMallya #Mallyaextradition #UKHighCourt
  லண்டன்:

  இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

  இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டது.

  இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட  ஆவணங்களை தாக்கல் செய்தன.


  விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்ற விசாரணையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

  இந்த தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், ஒருவாரத்துக்குள் எழுத்து மூலமாக அவர் புதிதாக விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

  அவ்வகையில் அவர் தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது ஜூலை மாதம் 2-ம் தேதி விரிவான விசாரணை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் விஜய் மல்லையா சார்பில் அவரது வழக்கறிஞர்களும், இந்திய அரசு சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் பிரிவும் (கிரவுன் பிராசிக்கியூஷன் சர்வீஸ்) வாதாடுவார்கள். மல்லையாவின் கோரிக்கை இங்கு ஏற்கப்பட்டால் நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக அவர் லண்டன் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யலாம்.

  அல்லது, அவரது கோரிக்கை லண்டன் ஐகோர்ட்டால் நிராகரிக்கப்பட்டால் அவரால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல முடியாது. மாறாக, இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்னும் கோணத்தில் பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்போர்க் நகரில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை விஜய் மல்லையா நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #VijayMallya #Mallyaextradition #UKHighCourt
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரிட்டனில் இருந்து தன்னை நாடு கடத்த தடை விதிக்கக் கோரி தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
  லண்டன்:

  இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.  இந்த உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரது மேல்முறையீட்டு மனுவையும் இன்று தள்ளுபடி செய்தது. இதனால், மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.  #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து கோர்ட்டில் விஜய் மல்லையா மீது 1.145 பில்லியன் பவுண்ட் திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. #VijayMallya #UKHighCourt #Bankruptcy
  லண்டன்:

  இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பிச்செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 62), இங்கிலாந்துக்கு தப்பி ஓட்டம் பிடித்தார்.

  அவரை இங்கே நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த வாரம் உத்தரவிட்டது.

  இந்த நிலையில் அவர் மீது இங்கிலாந்து கோர்ட்டில் 1.145 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.10 ஆயிரத்து 260 கோடி) திவால் வழக்கு போடப்பட்டுள்ளது.

  இந்த வழக்கின் விசாரணையையும் சந்திக்க வேண்டிய நெருக்கடியில் அவர் தள்ளப்பட்டுள்ளார்.

  இதுபற்றி பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்புக்காக லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள டி.எல்.டி.எல்.எல்.பி. சட்ட நிறுவனத்தின் பங்குதாரரான பால் கெயில் கூறும்போது, “இந்திய வங்கிகள் சார்பில் விஜய் மல்லையா மீது கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதி திவால் வழக்கு தாக்கல் செய்து இருப்பதை உறுதி செய்கிறோம்” என குறிப்பிட்டார்.

  இந்த வழக்கு லண்டன் ஐகோர்ட்டில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #VijayMallya #UKHighCourt #Bankruptcy
  ×