search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "typing"

    • குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் தேர்வு மையத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1869 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
    • இதில் இளநிலை மாணவ-மாணவிகள் 1113 பேரும், முதுநிலை மாண-மாணவிகள் 756 பேரும் அடங்குவர்.

    குமாரபாளையம்:

    அரசின் தட்டச்சு தேர்வு தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் தேர்வு மையத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1869 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் இளநிலை மாணவ-மாணவிகள் 1113 பேரும், முதுநிலை மாண-மாணவிகள் 756 பேரும் அடங்குவர்.

    தட்டச்சு தேர்வு கொரோனா காலகட்டத்தில் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாமல் காலதாமதமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்வு சரியாக அதே மாதத்தில் நடைபெறுவதால் தேர்வு எழுத மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

    போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இந்த முறை நடைபெறும் தட்டச்சு தேர்வு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்பதை முதன்மை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

    ×