என் மலர்
நீங்கள் தேடியது "turnout"
- பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது.
- 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவானது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி, இன்று மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
தொடர்ந்து, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது.
5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவானது.
இதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 மணிக்கு முடிவடைந்தது.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 1,95,495 லட்சம் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று மூன்றாம்கட்ட தேர்தல் நடைபெற்றது.
இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அசாம் மாநிலத்தில் 78.29% வாக்குகளும் பீகாரில் 59.97% வாக்குகளும் பதிவாகின. கோவாவில் 71.09% வாக்குகளும் குஜராத்தில் 60.21% வாக்குகளும் பதிவாகின. ஜம்மு-காஷ்மீரில் 12.86% வாக்குகளும் கர்நாடகாவில் 64.14% வாக்குகளும் பதிவாகின. கேரளாவில் 70.21% வாக்குகளும் மகாராஷ்டிராவில் 56.57% வாக்குகளும் பதிவாகின.
யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யில் 71.43% வாக்குகளும் டாமன் மற்றும் டியூ-வில் 65.34% வாக்குகளும் பதிவாகின.
அவ்வகையில், மேற்கண்ட தொகுதிகளில் இன்று ஒட்டுமொத்தமாக 64..66 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #voterturnout