என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trying burn"

    பண்ருட்டி அருகே முன்விரோத தகராறில் பெண்ணை உயிருடன் எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி சிவமணி (வயது 45).

    இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் இடையே வீட்டு மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக இவர்களுக் கிடையே அடிக்கடி தக ராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் சுந்தர மூர்த்தியும், அவரது மனைவி சிவமணியும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 1 மணி அளவில் சிவமணியின் அலறல் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்த சுந்தரமூர்த்தி வீட்டின் தோட்டத்து பகுதிக்கு சென்று பார்த்த போது சிவமணி உடலில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்கிருந்து 2 மர்ம மனிதர்கள் ஓடியதை சுந்தரமூர்த்தி பார்த்தார். பின்னர் தனது மனைவி சிவமணியின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து சிவமணியை மீட்டார்.

    இதில் சிவமணிக்கு ஆங் காங்கே பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து சிவமணியின் கணவர் சுந்தரமூர்த்தி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×