search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "truck seized"

    மானாமதுரை அருகே அனுமதியின்றி சவடு மண் அள்ளி சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை வட்டாரத்தில் மணல் திருட்டு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பலரும் வைகை ஆற்றிலும் கண்மாய் பகுதிகளிலும் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருகின்றனர். இரவு 10 மணி முதல் விடிய விடிய மணல் திருட்டு நடந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் அனுமதியின்றி சவடு மண் ஏற்றிக்கொண்டு செல்வதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அந்த பகுதியில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது லாரியில் சவடு மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து டிரைவர் வெள்ளைச்சாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் மண் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை அபராதத்துடன் விடுவிக்காமல் பறிமுதல் செய்து அரசின் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதே போல மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்பது பெயரளவிலேயே உள்ளது. எனவே மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திஉள்ளனர். 
    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விழுப்பணங்குறிச்சி பகுதியில் திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆற்றில் இருந்து லாரியில், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்த வெற்றியூரை சேர்ந்த டிரைவர் ராஜசேகர் (வயது 19), விழுப்பணங்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன் (26), கார்த்திகேயன் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து, பொக்லைன் எந்திரம்- 2 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×