search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transport employees strike"

    கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயக்கப்படுவதை கண்டித்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் கோவை டாடாபாத்தில் உள்ள பவர் ஹவுஸ் அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    உண்ணாவிரதத்திற்கு கோவை மண்டல தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் வில்லியம், அமைப்பு செயலாளர் மோகன் ராஜ், பொருளாளர் நடராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணவிரதத்தை மாநில தலைவர் ராகவேந்திரன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி கோவை தலைவர் குப்புசாமி, மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், இணை பொது செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

    கண்டக்டர் இல்லாத பஸ் இயக்கத்தை கைவிட வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த டிரைவர்கள், கண்டக்டர்களை முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    போக்குவரத்து கழகத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்கி, போதுமான தொழில் நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரதத்தை மாநில பொது செயலாளர் பத்மநாபன் முடித்து வைக்கிறார். முடிவில் பெரிய சாமி நன்றி கூறுகிறார்.

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு போக்குவரத்துகழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு போக்குவரத்துகழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதில் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மண்டலங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு கோட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். தலைவர்கள் மாரப்பன், ராஜா, துணை தலைவர் மயில்சாமி, ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதத்தை மாநில பொதுச்செயலாளர் பத்மநாபன் தொடங்கி வைத்து பேசினார். ஆர்.சி., ஆர்.டி. என்ற பெயரில் நியமனம் செய்த ஓட்டுநர், நடத்துனர்களை பணியில் சேர்ந்த நாளில் இருந்து 240 நாட்கள் பணி செய்து முடித்தவர்களை நிரந்தர செய்ய வேண்டும். நடத்துனர் இல்லாமல் பேருந்து இயக்கத்தை கைவிட்டு ஓட்டுநர் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதுமான உதிரிபாகங்கள் வாங்க வேண்டும். போதுமான பணி நியமனங்கள் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    முடிவில் பொருளாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.
    ×