search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train 18"

    டெல்லி மற்றும் ஆக்ரா இடையே இன்று நடைபெற்ற சோதனை ஓட்டத்தின்போது அதிவேக ரெயில் மீது கல்விசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். #Train18 #Peltedstonesintrialrun
    புதுடெல்லி:

    ரெயில்வே துறையால் நாட்டின் அதிவேக ரெயிலான டிரெயின் 18 டிசம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரெயில் டெல்லி மற்றும் ஆக்ரா நகரங்களை இணைக்கும்.

    சென்னை ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ரூ.100 கோடி செலவில் உருவான டிரெயின் 18 அதிவேக ரெயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சதாப்தி ரெயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் இந்த அதிவேக ரெயிலானது என்ஜின் இல்லாமல் இயங்கும் முதல் ரெயில் என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்த அதிவேக ரெயிலின் சோதனை ஓட்டம் டெல்லி மற்றும் ஆக்ரா இடையே இன்று நடைபெற்றது.  அப்போது இந்த  ரெயில் பெட்டி ஒன்றில் கல் வீசப்பட்டது.

    இதுதொடர்பாஜ ஐசிஎப் பொது மேலாளர் சுதான்ஷு மனு டுவிட்டரில் கூறுகையில், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலை தலைமை வடிவமைப்பு பொறியாளர் ஸ்ரீனிவாஸ் ரெயில் பெட்டியில் இருந்துள்ளார். அதிவேக ரெயில் மணிக்கு 181 கிலோமீட்டர் வேகத்தினை எட்டி சாதனை படைத்துள்ளது. சோதனை ஓட்டத்தில் ரெயில் மீது மர்ம நபர் ஒருவர் கல்லை தூக்கி வீசியதில் கண்ணாடி உடைந்துள்ளது. அவரை பிடித்து விடுவோம் என நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.

    அதிவேக ரெயில் மீது கல் வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Train18 #Peltedstonesintrialrun
    ‘ரெயில்-18’ ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் கோடா-சவாய் மாதோபூர் வழித்தடத்தில் நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மணிக்கு 180 கி.மீ. வேகத்தை தாண்டி ஓடியது. #EngineLessTrain #SpeedRecord #Train18
    புதுடெல்லி:

    ரூ.100 கோடி செலவில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ரெயில்-18’, கடந்த அக்டோபர் 29-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. என்ஜின் இன்றி தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதலாவது ரெயில் இதுவாகும். 16 பெட்டிகளை கொண்ட இதில், சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற வசதிகள் உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தயாரிக்கப்பட்டவை ஆகும். முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டது. ரெயிலின் இரு முனைகளிலும் டிரைவர் கேபின் உள்ளது.

    இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் கோடா-சவாய் மாதோபூர் வழித்தடத்தில் நடைபெற்றது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மணிக்கு 180 கி.மீ. வேகத்தை தாண்டி ஓடியது. இது, பெரிய அளவிலான சோதனை ஓட்டம் ஆகும். இதில், எவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் கண்டறியப்படவில்லை என்று ரெயிலை உருவாக்கிய ஐ.சி.எப். பொது மேலாளர் மணி தெரிவித்தார்.

    இந்த ரெயில், ஜனவரி மாதம் வர்த்தக போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அப்போது, நாட்டின் அதிவேக ரெயிலாக இது திகழும். நடப்பு நிதி ஆண்டில் இதேபோன்ற மேலும் ஒரு ரெயிலையும், அடுத்த நிதி ஆண்டில் 4 ரெயில்களையும் அறிமுகப்படுத்த ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. #EngineLessTrain #SpeedRecord #Train18
    ×