என் மலர்
நீங்கள் தேடியது "Tragedy in family dispute"
- கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
- கணவன் மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு
சேலம்:
சேலம் கொண்ட லாம்பட்டி அருகே பனங்காடு அடுத்த ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகுலநாதன் (வயது 30). இவருக்கும், மல்லூர் அருகே பாரப்பட்டி பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகள் ராஜேஸ்வரி (வயது 26) என்பவருக்கும் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. வெள்ளிப் பட்டறை தொழிலாளியான கோகுலநாதனுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு நடந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை ராஜேஸ்வரியின் தாயார் மணி, அவரது மகன் குணசேகரன் ஆகியோர் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் வீட்டில் ராஜேஸ்வரி இல்லை. இந்நிலையில் அங்கிருந்த ஒரு அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப் பட்டு இருப்பதை கண்ட குணசேகரன், அக்கம்பக்கத்தினர் உதவியு டன் கதவை உடைத்து உள்ளார். உள்ளே ராஜேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். 4 மாத குழந்தை தொட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரியின் தாயார் மணி கூச்சலிட்டார். பின்னர் இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேஸ்வரி உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி மற்றும் சப்-கலெக்டர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 மாத ஆண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.