search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traders Association Annual Meeting"

    • உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 42-வது ஆண்டு விழா உடன்குடியில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வியாபாரத்திற்கு இடையூறாக சாலைகளில் திரியும் கால்நடைகளை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 42-வது ஆண்டு விழா உடன்குடி யில் நடைபெற்றது.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவரும், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவருமான ரவி தலைமை தாங்கினார். வணிகர் சங்க பேரவையின் மாநில செயல் தலைவர் பா. விநாயகமூர்த்தி, மாநில பொதுச்செயலர் ராஜா, மாவட்ட செயலர் செந்தமிழ்செல்வன், பொன்ராஜ், துரைசிங், தமிழரசன், லிங்கம், அரசகுமார், சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணமந்திரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் ஆண்டறிக்கையை செயலர் வேல்ராஜனும், வரவு- செலவு அறிக்கையை பொருளாளர் சுந்தரும் வாசித்தனர்.

    கூட்டத்தில் உடன்குடி மெயின் பஜாரில் வியாபாரி களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஈருக்கும் புறக்காவல் நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும், வியாபாரத்திற்கு இடையூறாக சாலைகளில் திரியும் கால்நடைகளை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உடன்குடி வாரச்சந்தையை தினசரி சந்தையாக மாற்ற பேரூராட்சி நிர்வாகத்தை கேட்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் உடன்குடி கனரா வங்கிகிளை மேலாளர் தெய்வநாயகி, பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் முகமது சலீம், சங்கத்தின் துணைத்தலை வர்கள் ஷேக் முகம்மது, அமுதன் அண்ட்ரூஸ், துணைச் செயலர்கள் ராஜா, பிரதீப் சரவணன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×