search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "toyota land cruiser lc300"

    • டொயோட்டா நிறுவனத்தின் புகழ் பெற்ற லேண்ட் குரூயிசர் LC300 மாடல் உலக சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
    • இந்தியாவில் இந்த மாடலுக்கான முதற்கட்ட யூனிட்கள் ஏற்கனவே விற்றுத்தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் குரூயிசர் LC300 மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகி உள்ளது. சோதனையில் சிக்கிய யூனிட் லேண்ட் குரூயிசர் LC300 சகாரா ZX வேரியண்ட் ஆகும். இது வலது புற டிரைவ் வசதி கொண்டு இருக்கிறது.

    சோதனையில் சிக்கிய டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 மாடலில் நம்பர் பிளேட் எதுவும் இடம்பெறவில்லை. அந்த வகையில், இந்த மாடல் சோதனை யூனிட் அல்லது டெமோ வாகனமாக இருக்க வாய்ப்புகள் குறைவு தான். இந்த மாடலை தனி நபர் யாரேனும் வாங்கி இந்தியாவில் இறக்குமதி செய்து இருக்கலாம்.


    Photo Courtesy: Instagram | carcrazy.india

    இந்த எஸ்.யு.வி. மாடல் கோயம்புத்தூரில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்திகேயன் பிறந்த ஊர் தான் கோயம்புத்தூர் ஆகும். முன்னதாக டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டன. எனினும், அதிக வரவேற்பு காரணமாக இதன் முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது.

    தற்போதைய தகவல்களின் படி டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 முதற்கட்ட யூனிட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாக தெரிகிறது. இந்தியா மட்டும் இன்றி டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 மாடலுக்கு சர்வதேச சந்தையிலும் அதிகளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. சில நாடுகளில் இந்த மாடலை டெலிவரி பெற அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

    ×