என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourist Complex"

    • நீர்வளத்துறையின் வாயிலாக நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார். குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட பெருமாள் ஏரியின் இயல்பான கொள்ளவு 574 மில்லியன் கன அடியாகும். தற்போது 228.86 மில்லியன் கன அடியாக உள்ளது, தற்போது தூர் வாரும் பணியின் மூலம்; சுமார் 1.40 கோடி கனமீட்டர் அளவிளான மண் எடுக்கப்பட்டு வருகிறது, அவ்வாறு மண் எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் ஏரியின் கொள்ளவு 723.27 மில்லியன் கன அடியாக உயரும், இதனை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க நீர் வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி வட்டத்தில் கீழ்பரவனாறு தொலைக்கல் 7 கி.மீ வரையிலான விரிவான வெள்ளத்தடுப்பு பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறையின் வாயிலாக நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்அனுவம்பட்டு-கோவிலாம்பூண்டி சாலை மேம்படுத்தும் பணி, அம்புபூட்டியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டார். பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தை ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்துதல் பணிகளையும் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையான பிச்சாவரத்தில் உள்ள தீவுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் காட்டேஜ் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவது குறித்தும் ஆய்வு செய்தார். சிதம்பரம் நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் வெளிவட்ட இருபுற மாற்றுத் தார்சாலை அமைக்கும் பணிக்கு இடம் தேர்வு செய்யப்படடுள்ளதை பார்வையிட்டார். சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மைய செயல்பாடுகளை பார்வையிட்டதோடு பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்தும் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன், துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பரந்தாமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உடனிருந்தனர்.

    ×