search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato plants"

    • மழையால் செடிகள் மட்டுமின்றி, காய் மற்றும் பழங்கள் அழுகியுள்ளதோடு பறிக்க முடியாமலும் வீணாகி வருகிறது.
    • மழைக்கு தாங்காது என்பதால், வெளி மாவட்ட விவசாயிகள் உடுமலையிலிருந்து தக்காளி கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. கொடி மற்றும் செடி முறையில், ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் தக்காளி, கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்குச்செல்கிறது.

    வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், இதனை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர். மழையால் செடிகள் மட்டுமின்றி, காய் மற்றும் பழங்கள் அழுகியுள்ளதோடு பறிக்க முடியாமலும் வீணாகி வருகிறது.

    மழையில் பறிக்கும் தக்காளி சந்தைக்கு வருவதற்குள் அதிக அளவு அழுகி விடுகிறது. இதனால் அதன் மகசூல் பெருமளவு பாதித்துள்ளது. இதையடுத்து சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.செடிகளிலிருந்து பறிக்கும் தக்காளிகளை உடுமலை பகுதிகளிலுள்ள ரோட்டோரங்களிலும் சந்தை வளாகத்திலும் வீசிச்செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் தக்காளி உடுமலை நகராட்சி சந்தை மற்றும் தனியார் விற்பனை மையங்களுக்கு கொண்டு சென்று ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.மகசூல் சரிந்து, விற்பனைக்கு வரும் தக்காளி வரத்து பெருமளவு குறைந்தாலும் அது விலை சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் 14 கிலோ கொண்ட பெட்டி 700 ரூபாய் வரை விற்றது. தற்போது கொடி தக்காளி ஒரு பெட்டி 160 ரூபாய் வரையும், செடி தக்காளி 100 முதல், 120 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.மழைக்கு தாங்காது என்பதால், வெளி மாவட்ட விவசாயிகள் உடுமலையிலிருந்து தக்காளி கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

    ×