search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Health secretary"

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார். #JayaDeathProbe #TNHealthSecretary #Radhakrishnan
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

    அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதா பாதுகாப்பு அதிகாரிகள், போயஸ் கார்டன் ஊழியர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    தமிழக சுகதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் 2-வது முறையாக இன்றும் ஆஜராகி அவர் விளக்கம் அளித்தார்.


    ஆணையத்தில் ஆஜர் ஆவதற்காக காலை 10 மணியளவில் எழிலகத்துக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். காலை 10.20 மணிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்.

    பிற்பகல் 1 மணி வரை அவர் விசாரணை முடிந்து வெளியில் வரவில்லை. #JayaDeathProbe #TNHealthSecretary #Radhakrishnan
    தமிழகத்தில் இந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #DengueFever #SwineFlu #DengueDeaths #TNHealthSecretary
    சென்னை:

    டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தை பலியானதை அறிந்ததும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.

    அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளாட்சி துறை ஊழியர்கள் இணைந்து இந்த பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொது மக்களும் இணைந்து செயல்பட்டால் தான் கொசுக்களை ஒழிக்க முடியும். டெங்குவினால் உயிர் இழப்பு என்பது ஒரு சதவீதம் என்று கூறலாம். உடலில் தட்டணுக்கள் குறைந்து ரத்தம் வெளியேறும் ஆபத்தான கடைசி நேரத்தில் மட்டுமே உயிர் இழப்பு நேரிடும்.

    அந்த ஒரு சதவீதமும் டெங்கு பாதிப்பு மட்டுமல்லாமல் வேறு நோய்களிலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு தாமதமாக வருவதால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள், தடுப்பூசி போன்றவை போதுமானதாக உள்ளன. டெங்குவை கண்டுபிடிக்க கூடிய ‘எலிசா’ பரிசோதனையும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ளது. காலி இடங்களில் மழைநீர் தேங்காமல் மக்கள் பார்த்து கொள்ள வேண்டும்.


    குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். மழை நீர் தேங்கக் கூடிய வீடு-கடைகளில் அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கொசு உற்பத்தியாகக் கூடிய இடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் தயாராக இருக்கின்றன. பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் வந்த உடனே ஆஸ்பத்திரிக்கு வந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அலட்சியமாக இருக்க வேண்டாம்.

    பன்றிக் காய்ச்சல் சங்கரன் கோவில், மதுரை, கோவை, சென்னை போன்ற இடங்களில் பரவி வருகிறது. கிருமி பரவாமல் தடுக்க அடிக்கடி கை கழுவ வேண்டும். பன்றி காய்ச்சல் ஆஸ்துமா, நீரிழிவு நோய் பாதிப்பு உடையவர்கள், கர்ப்பிணிகளை எளிதாக தாக்க கூடியது. சுகாதாரத் துறை தீவிரமாக கண் காணித்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. 2012-ம் ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் 2 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

    பன்றிக் காய்ச்சலால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 50 பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது.

    இந்த ஆண்டு இதுவரையில் 5 பேர் டெங்கு காய்ச்சலிலும், 11 பேர் பன்றி காய்ச்சலிலும் உயிர் இழந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #DengueFever #SwineFlu #DengueDeaths #TNHealthSecretary
    ×