என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvarur medical college hospital"

    ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    நாகை மாவட்டம் செட்டியக்குடியை சேர்ந்தவர் சின்னையன் (வயது 45). கூலி தொழிலாளி.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னையன் ஒரு விபத்தில் சிக்கினார். இதனால் அவரது இரு கைகளிலும் பலத்த அடிபட்ட நிலையில் நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த 23-ந் தேதி முதல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சின்னையன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையின் உள் நோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் 2-வது மாடியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    சின்னையனுக்கு துணையாக மனைவி லட்சுமியும் உடன் இருந்தார். இந்த நிலையில் விபத்தில் காயம் அடைந்த சின்னையனின் இரு கைகளும் செயல்படாத நிலையில் இருந்து வந்தது. மேலும் சில நேரங்களில் அவருக்கு வலிப்பு நோயும் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இதை நினைத்து சின்னையன் மனவேதனை அடைந்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை சின்னையன் தான் தங்கி சிகிச்சை பெற்று வந்த 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தலை, கை- கால்களில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பட்டப்பகலில் தொழிலாளி 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம், ஆஸ்பத்திரிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொழிலாளி சின்னையன் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×