search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur youth murder"

    • சஞ்ஜீவ்குமாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்தவர் சஞ்ஜீவ்குமார் (வயது 18). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசிக்கொண்டனர்.

    இந்தநிலையில் சஞ்ஜீவ்குமார் தனது பிறந்தநாளையொட்டி, காதலியை நேரில் சந்தித்து பேசுவதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு தனது காதலியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். காதலிக்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொடுத்துள்ளார்.

    இதனிடையே சஞ்ஜீவ்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதையடுத்து போலீசார் சஞ்ஜீவ்குமாரிடம் விசாரணை நடத்திய போது, தான் காதலியை தேடி சென்னைக்கு வந்ததாகவும், காதலி தந்த குளிர்பானத்தை குடித்ததில் இருந்து தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், குளிர்பானத்தில் விஷம் கலக்கப்பட்டதாகவும் மரண வாக்குமூலம் அளித்தார்.

    தொடர்ந்து சஞ்ஜீவ்குமாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் சஞ்ஜீவ்குமார் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது காதலி யாரென்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக சஞ்ஜீவ்குமார் தனது காதலியுடன் சென்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதில் அவர் தனது காதலியுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதனை வைத்து சிறுமியை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் சஞ்ஜீவ்குமார் மரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

    மேலும் சஞ்ஜீவ்குமாரின் பெற்றோரும் தனது மகன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    காதலியை தேடி சென்னை சென்ற திருப்பூர் வாலிபர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    திருப்பூர் அருகே வெட்டு காயங்களுடன் காட்டுக்குள் பிணமாக கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரம் கள்ளப்பாளையத்தில் உள்ள காட்டு பகுதியில் இன்று காலை 30 வயது மதிக்கதக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை. அவரை வேறு எங்காவது கொலை செய்துவிட்டு பிணத்தை இங்குள்ள காட்டு பகுதியில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியரை கொன்ற கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படை அமைத்துள்ளனர்.
    திருப்பூர்:

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரமோத்குமார் (வயது 21). இவர் திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையம் அருகில் உள்ள ஹாலோபிளாக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    மர்ம நபர்கள் இவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பிரமோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை செய்யப்பட்டபோது பிரமோத் குமாருடன் வெளியில் சென்ற சக ஊழியர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தப்பிச் சென்ற 2 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் பார்வையிட்டனர்.

    மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்

    ×