search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur - Palladam"

    • மாலை 6 மணியளவில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்ய துவங்கியது.
    • திருப்பூர் மாநகர் பகுதியிலும் நேற்றிரவு லேசான தூரலுடன் மழை பெய்தது.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. மாலை 6 மணியளவில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து தூரல் மழையாக பெய்துகொண்டே இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததாலும், அதனால் ஏற்பட்ட குளிராலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.இதேப்போல் திருப்பூர் மாநகர் பகுதியிலும் நேற்றிரவு லேசான தூரலுடன் மழை பெய்தது.

    • திருப்பூர் குமார் நகர், பல்லடம், துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன், பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் குமார் நகர், பல்லடம், துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, கொங்கு மெயின்ரோடு, இளங்கோநகர், ஜவகர்நகர், எம்.எஸ்.நகர், எஸ்.எஸ்.நகர், டி.எம்.எஸ்.நகர்., கவுண்டநாயக்கன்பாளையம், குறிஞ்சிநகர், பவானிநகர், வீவர்ஸ் காலனி, திருமலைநகர், சந்திராகாலனி, முருகானந்தபுரம், அம்பேத்கர் காலனி, நீதியம்மாள் நகர், கண்ணகி நகர், பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    அதுபோல் குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி ஆகிய பகுதிக்கு உட்பட்ட ஆதியூர், தளபதி, காவத்தம்பாளையம், சின்னையம் பாளையம், கணபதிபாளையம், நவக்காடு, கருமஞ்செரை, 16 வேலம்பாளையம், கணபதிபாளையம் சொக்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பெருந்துறை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×