என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur govt bus"

    • பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன்.
    • எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக மொண்டிபாளையம் செல்லும் அரசு நகர பேருந்தில் (எண்.9 ஜே) கண்டக்டராக கடந்த 2 வாரங்களாக கோகிலா (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    திருப்பூரில் இயக்கப்படும் பேருந்துகளில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், பெண் ஒருவர் ஆர்வமுடன் பணியாற்றி வருவது பயணிகள் இடையே பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பெண் பயணிகள் பலர் கோகிலாவுக்கு, பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பெண் கண்டக்டர் கோகிலா கூறுகையில், நான் எம்.ஏ.,படித்துள்ளேன். எனது தந்தை ராமலிங்கம். நம்பியூர் கிளையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரது இறப்பால் தற்போது எனக்கு வாரிசு வேலை கிடைத்துள்ளது.

    இப்பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டது. ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். இதுவரை பேருந்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. மகிழ்ச்சியோடு பணியாற்றி வருகிறேன். எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம் என்றார்.

    திருப்பூரில் நேற்று நள்ளிரவில் அரசு பஸ் மீது கல்வீசப்பட்டதில் டிரைவர் மற்றும் பயணிகள் காயம் அடைந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு திருச்சிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை கரூரை சேர்ந்த டிரைவர் வெள்ளைச்சாமி ஓட்டி சென்றார்.

    இதில் 40 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் நல்லூர் அருகே உள்ள பள்ளக்காட்டு புதூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் திடீரென பஸ் மீது கல் வீசினார். இதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இந்த கண்ணாடி டிரைவர் வெள்ளைச்சாமி மற்றும் பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண், இரு குழந்தைகள் மீது விழுந்தது.

    இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். கண்ணாடி டிரைவர் மீது விழுந்ததும் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. சுமார் 500 அடி தூரம் தாறுமாறாக ஓடியது. டிரைவர் சுதாரித்து கொண்டு பஸ் விபத்தில் சிக்காமல் சாதுர்யமாக செயல்பட்டு நிறுத்தினார்.

    இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினார்கள். கண்ணாடி உடைந்ததில் காயம் அடைந்த டிரைவர் உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

    விபத்து குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பஸ் கல் வீசப்பட்ட பகுதியில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. அங்கு திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஏராளமானோர் வந்து இருந்தனர்.

    அவர்கள் தான் கல் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக திருமணத்திற்கு வந்த 10 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது பஸ் மீது கல் வீசியது திருப்பூர் ராக்கியா பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மனோஜ் குமார் (20) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் எதற்காக பஸ் மீது கல்வீசினார். குடிபோதையில் வீசினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×