search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiger reserve expansion"

    • ஊட்டி தாலுகாவில் 22 கிராமங்களும், பந்தலூா் தாலுகாவில் 7 கிராமங்களும் பாதிக்கப்படும். மசினகுடி ஊராட்சி முழுமையாக பாதிப்புக்குள்ளாகிறது.
    • 50 கிராமங்களை சரணாலய பகுதியின் வெளிவட்ட மண்டலத்தில் இருந்து நீக்க சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு அணுக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்டப் பகுதியின் எல்லையை ஒரு கிலோ மீட்டா் தூரம் விரிவாக்கம் செய்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 3.6.2022 அன்று உத்தரவு பிறப்பித்தது. புலிகள் காப்பக விரிவாக்கம் தொடா்பாக கூடலூரில் பல்வேறு கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் நிைறவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    இந்த பகுதிகளில் உள்ள 50 கிராமங்களில் சுமாா் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனா். ஏற்னவே வன விலங்குகளால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு இது மேலும் மனச்சுமையை தருகிறது. இதனால் ஊட்டி தாலுகாவில் 22 கிராமங்களும், பந்தலூா் தாலுகாவில் 7 கிராமங்களும் பாதிக்கப்படும். மசினகுடி ஊராட்சி முழுமையாக பாதிப்புக்குள்ளாகிறது.

    பாட்டவயல், பிதா்க்காடு, முதிரக்கொல்லி, விலங்கூா், மேபீல்டு ஆகிய கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. கூடலூா் தாலுகாவில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் 1860 வீடுகளும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் பாதிக்கப்படுவா்.

    மேற்கூறிய 50 கிராமங்களை சரணாலய பகுதியின் வெளிவட்ட மண்டலத்தில் இருந்து நீக்க சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு அணுக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தமிழக அரசுதான் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என்று தீா்ப்பில் கூறப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் மண்டலத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், புலிகள் காப்பக வெளிமண்டல விரிவாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறை யிட்டு விலக்கு பெற முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    ஒருங்கிணைப்பாளா் என்.வாசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் இளஞ்செழியன், செயற்குழு உறுப்பினா் பாண்டியராஜ், காங்கிரஸ் நகரத் தலைவா் சபீக், மார்க்சிஸ்ட் கட்சி செயலாளா் மணி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளா் முகமது கனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் சகாதேவன், நகரச் செயலாளா் துயில்மேகம், மசினகுடி வாழ்வுரிமை இயக்க நிா்வாகி வா்கீஸ், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ரசாக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

    ×