search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thug prevention Law"

    • திருப்பூா் மாவட்டம், பல்லடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை 5 நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.
    • செல்வம் என்ற வெங்கடேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மாவட்டம், பல்லடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை 5 நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.

    இந்த கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் கடந்த செப்டம்பா் 21- ந் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

    இந்த வழக்கில் தொடா்புடைய திருநெல்வேலி மாவட்டம், வடக்கு அரியநாயகிபுரம், அம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த ஏ.செல்வம் (எ) வெங்கடேஷை (29) குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓா் ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

    இதையடுத்து, செல்வம் என்ற வெங்கடேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள வெங்கடேஷிடம் போலீசார் வழங்கினா்.

    அதேபோல, அவிநாசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொலை வழக்கில் தொடா்புடைய திண்டுக்கல் மாவட்டம், புஸ்பத்துரைச் சோ்ந்த கில்டன் (22), வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொள்ளை வழக்கில் தொடா்புடைய மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த தாந்தவன்குளத்தைச் சோ்ந்த மருது (29) ஆகியோரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

    காங்கயம் காவல் நிலையத்துக்குள்பட்ட சிவன்மலையில் ஆயில் மில் உரிமையாளா் வீட்டில் நடந்த கூட்டுக் கொள்ளை வழக்கில் தொடா்புடைய கள்ளக்குறிச்சி, ஆறாம்பூண்டி குச்சிக்காட்டைச் சோ்ந்த பி.அண்ணாதுரை (32), தளி தெருவைச் சோ்ந்த பி.சுந்தா் (25),ஆறாம்பூண்டி மேல்தெருவைச் சோ்ந்த எஸ்.ராமநாதன் (35) ஆகியோரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.திருப்பூா் மாவட்டத்தில் நிகழாண்டு தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 47 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×