search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiru Vilakku Pooja"

    • விழாவையொட்டி கோவில் முழுவதும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
    • நாடு வளர்ச்சியடையவும்,மழை பொழிந்து விவசாயம் செழித்திடவும், சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள மில்லர்புரம் பர்மா காலனியில் அமைந்திருக்கும் முனீஸ்வரர் கோவிலில் 28-ம்ஆண்டு கொடை விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி கால்நட்டு விழா நடந்தது. அதன் பின்னர் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    திருவிளக்கு பூஜை

    விழாவையொட்டி கோவில் முழுவதும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. நேற்று மாலை முனீஸ்வரர், மாரியம்மன் கண்திறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து நாடு வளர்ச்சியடையவும், எல்லா மக்களுக்கும் எல்லா செல்வங்களும் கிடைக்க வேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழித்திடவும், அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டியும் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடை பெற்றது.

    இன்று காலை தீர்த்தகரை சென்று வந்தனர். பின்னர் மதியம் சிறப்பு பூஜையுடன் 2 ஆயிரம் பேருக்கு பொது சமபந்தி விருந்து நடைபெற்றது.

    மாலையில் சிறப்பு பூஜையுடன் தொடர்ந்து பொங்கலிடுதல், முளைப்பாரி ஊர்வலம், அதனை தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்துடன் சாமக்கொடை விழா நடைபெறுகிறது.

    பின்னர் இரவு அன்னதானம் நடை பெறுகிறது. அன்னதானத்தை பண்டாரவிளை வைத்தியர் முருகேசன் நாடார் தொடங்கி வைக்கிறார்.

    கலந்து கொண்வர்கள்

    கோவில் கொடை விழாவை முன்னிட்டு தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், மாநில பேச்சாளார் சரத்பாலா, வட்ட செயலாளர் கீதாமாரியப்பன், தொழிலதிபர்கள் பொன்னப்பன், குமார், ஆனந்த், சசிகுமார் மற்றும் பல்வேறு ஊர் பொதுமக்கள் உள்பட சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமர், தர்மகர்த்தா கந்தகுமார், செயலாளர் சரவணன், பொருளாளர் தங்கமாரியப்பன், துணை தர்மகர்த்தா கணேசன், பொருளாளர் அன்புராஜ், செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.

    ×