என் மலர்
நீங்கள் தேடியது "Theertha Kalasam"
- முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் இருந்து மஞ்சள் தீர்த்த கலசம் முத்திரிக்கப்பட்டது.
- பொன் காளியம்மன் கோவிலுக்கு மஞ்சள் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் இந்து அன்னையர் முன்னணி சார்பில் உலக நலன் வேண்டி மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் இருந்து மஞ்சள் தீர்த்த கலசம் முத்திரிக்கப்பட்டு பல்லடம் பொன் காளியம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மேற்குப் பல்லடம் முத்து மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு முத்து மாரியம்மனுக்கு மஞ்சள் தீர்த்த கலச அபிசேகம் நடைபெற்றது. இதில் அன்னையர் முன்னணி நிர்வாகி நிர்மலா, அமைப்பைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் லோகநாதன், நிர்வாகி செல்வம், வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.