search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The demands of the"

    • பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மண்டல டவுன் பஞ்சாயத்துக்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி துறை பணியாளர்கள் சங்க செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    டவுன் பஞ்சாயத்துகளில் பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை விதிகள், குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்டம் போன்ற பணிகளை அவுட் சோர்சிங் மூலம் தனியாரிடம் ஒப்படைக்க வழி வகுக்கும் வழிமுறைகளை கைவிட வேண்டும்.

    கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதிய சட்டப்படியான சம்பளத்தை வழங்க வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் இம்மாதம் 31-ந் தேதி வரை டவுன் பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 515 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.

    பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், பெத்தாம்பாளையம், காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், நல்லாம்பட்டி உள்ளிட்ட பல டவுன் பஞ்சாயத்துகளில் 501 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பிடித்தமான தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும்.

    டவுன் பஞ்சாயத்துகளில் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்டப்பணி, பராமரிப்பு போன்றவற்றை தனியாரிடம் வழங்கக்கூடாது.

    ஏற்கனவே பணியில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×