என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The couple who got married"

    • வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
    • இளம்பெண்ணின் பெற்றோர் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கோவை,

    கோவை குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பவுர்ணராஜ் (வயது 20). இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. எனவே கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் , இளம்பெண் வாலிபருடன் பழனி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    கோவை வழியாம் பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை தனியார் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் இவருக்கும் கோவை காந்திபார்க்கை சேர்ந்த சிந்து ஜான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று காலையில் கல்லூரி சென்ற மாணவி மாலையில் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அன்று மாலை சிந்துஜான் மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து தங்கள் மகளை திருமணம் செய்து கொண்டேன் என்றும் தங்களை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

    மாணவி மைனர் என்பதால் வாலிபர் மீது போக்சோ வழக்கு பாயும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×