search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Coimbatore collector"

    • ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் நடனம் ஆடினர்
    • கலெக்டர் ஒயிலாட்டம் ஆடியதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் பாரம்பரிய ஒயிலாட்டத்தை மீட்டெடுக்கும் விதமாக ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், கவுமாரமட ஆலய ஆதீனம் குருமரகுருபர சாமிகள், சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஒயிலாட்ட அரங்கேற்றத்தை தொடங்கி வைத்தனர்.

    பல்வேறு ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் நடனம் ஆடினர். நடனத்தை ரசித்த கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து பம்பை அடித்து ஒயிலாட்டம் ஆடினார்.

    அவருடன் ஒயிலாட்டக் கலைஞர்களும் நடனமாடியினர். இது அங்கிருந்த பொதுமக்களை கவரும் விதமாக இருந்தது. இது குறித்து ஒயிலாட்ட பயிற்சியாளரும், அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான கனகராஜ் கூறும்போது,

    பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் கிராமம்தோறும் இலவசமாக ஒயிலாட்டம், காவடியாட்டம் கற்றுக் கொடுத்து வருகிறோம். கிராமிய கலைகளை பயிலும் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்கள் கூறும்போது, வீட்டிலேயே முடங்கி இருந்த தங்களுக்கு இது போன்ற பயிற்சி மிகவும் உற்சாகத்தையும், மன வலிமையையும் தருகிறது என்றனர்.

    ×