search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenkasi Hospital"

    • செங்கோட்டை ராஜ்யம் அறக்கட்டளை,தென்காசி மாவட்ட மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி நடந்தது.
    • போட்டியில், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ராஜ்யம் அறக்கட்டளை, வனத்துறை மற்றும் அரசு நூலகம் வாசகர் வட்டம், வட்டசட்டப்பணிகுழு, தென்காசி மாவட்ட மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி நடந்தது. இதில் 4 வயது சிறுவர்கள் முதல் 85 வயது முதியவர் வரை ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.

    ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. 4 பிரிவாக மாரத்தான் போட்டி நடந்தது. முதல்போட்டியை செங்கோட்டை குற்றவியல்நடுவர் நீதிமன்ற நீதிபதி சுனில்ராஜா, 2-வது போட்டியை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர்ஜெஸ்லின், 3-வதுபோட்டியை புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவிசங்கர், 4-வதுபோட்டியை நூலக வாசகர்வட்டதலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், அவரவர் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு பொதுமக்கள் முன் வரவேண்டும்.

    பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பை பயன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் மாணவர்களிடம் ஏற்படுத்த ப்பட்டது.இந்த போட்டியில், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×