என் மலர்
நீங்கள் தேடியது "teenage missing"
- மல்லிகாவும் அவரது கணவன் மூர்த்தியும் கட்டிட வேலைக்கு சென்று விட்டனர்.
- மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சினேகாவை காணவில்லை.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்–தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவரது மனைவி மல்லிகா(40 ).
இருவரும் கட்டிடம் கட்டும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சினேகா(19 ) என்ற மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தபோது, மல்லிகாவும் அவரது கணவன் மூர்த்தியும் கட்டிட வேலைக்கு சென்று விட்டனர். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சினேகாவை காணவில்லை.
இதையடுத்து உறவி–னர்கள், நண்பர்கள் வீடு என பல்வேறு பகுதிகளில் தேடியும், சினேகா கிடைக்கவில்லை.
இதுகுறித்து மல்லிகா மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகாவை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள வீரபாண்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த சீனி மகள் ராஜலெட்சுமி (வயது 21). இவர் திண்டுக்கல்லில் உள்ள தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.
பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதற்காக பாட்டி சுருளியம்மாளுடன் தேனி புதிய பஸ்நிலையம் வந்தார். அங்குள்ள கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ராஜலெட்சுமி மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் லிங்கம்மாள் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் டொம்புசேரியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர்தான் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார்அவர்களை தேடி வருகின்றனர்.
போடி சர்ச் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் மனைவி அமுதா ராணி (வயது 19). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது கணவர் பிரவீன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.






