search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TB Diagnosis"

    • காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
    • சுகாதார கல்வி மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    செய்துங்கநல்லூர்:

    2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத வலிமையான தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கத்தோடு துணை இயக்குநர், மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர் சுந்தரலிங்கம் அறிவுறுத்தலின்பேரில், மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது.

    இதனடிப்படையில் தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கீழபுத்தனேரி துணை சுகாதார நிலையத்தில் நடந்தது.

    முகாமிற்கு மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் தலைமை தாங்கினார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல்ரஹீம் ஹீரா வரவேற்றார்.

    டாக்டர் கார்த்திக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கீழபுத்தநேரி காட்டு நாயக்கன் குடியிருப்பில் காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த குழுவினர் காசநோய் பாதித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள், காசநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், சுகாதார கல்வி மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    இம்முகாமில் சுகாதார பார்வையாளர் முத்துலெட்சுமி, செவிலியர் மரிய அந்தோணி பாரதி, பெண் சுகாதார தன்னார்வலர் சோ பனாதேவி, மருத்துவமனை பணியாளர் அழகம்மாள், தம்பான், சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீழபுத்தனேரி சுகாதார ஆய்வாளர் ஆகாஷ் நன்றி கூறினார்.

    ×