என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasnac"

    • தமிழகத்தில் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.
    • கோர்ட்டு வழக்கு, உரிமையாளர்கள் எதிர்ப்புக்குள்ள கடைகளை மூடுமாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    கோவை,

    தமிழகத்தில் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது.

    மத வழிபாட்டு தலங்களுக்கு அருகே உள்ளவை, மக்கள் எதிர்ப்புக்குள்ளானவை, கோர்ட்டு வழக்கு, உரிமையாளர்கள் எதிர்ப்புக்குள்ள கடைகளை மூடுமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்படி தமிழகத்தில் இன்று முதல் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த பட்டியலில், கோவை மாவட்டத்தில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு ஆகிய 2 டாஸ்மாக் மாவட்டங்களில் தலா 10 கடைகள் வீதம் 20 மதுக்கடைகள் இன்று முதல் மூடப்பட்டது.

    அதன்படி கோவை வடக்கு டாஸ்மாக் மாவட்டத்தில் காந்திபுரம் கணபதி கிராமம் 5-வது வீதி(கடை எண்:1528), 2-வது வீதி (எண்:1538), விளாங்குறிச்சி (எண்:1544 மற்றும் 1585), ராம்நகர் சாஸ்திரி ரோடு (எண்:1551), டாடாபாத் 11-வது வீதி (எண்:1570), விஸ்வநாதபுரம் ருக்கம்மாள் காலனி (எண்:1687), துடியலூர், இடிகரைரோடு (எண்:1627), தடாகம் (எண்:2214), காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடை (எண்:1720) உள்ளிட்ட 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.

    கோவை தெற்கு மாவட்டத்தில் சிங்காநல்லூர் கமலா மில் குட்டை ரோட் டில் என்.ஜி.ஆர் வீதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண்:1655), ஒண்டிப்புதூர் பட்டண்ணன் இட்டேரி தோட்டம் (எண்:1654), சிங்காநல்லூர் இருகூர் ரோடு (எண்:1658) கடையும் மூடப்பட்டது. இதேபோல் புலியகுளம் (எண்:1702), மதுக்கரை ரோடு (எண்:1760), பாலத்துறை (எண்:2234), சோமனூர் செம்மாண்டம்பாளையம் ரோடு குமரன் நகர் (எண்:1975), பொள்ளாச்சி, ஆனைமலை தொரையூர் (எண்:2286), ஜெகநாதா நகர் (எண்:1664), தெலுங்கு பாளையம் (எண்:1680) உள்ளிட்ட டாஸ்மாக் கடைகள் என மாவட்டத்தில் 20 கடைகள் மூடப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் இன்னும் பல பகுதிகளில் மக்களின் எதிர்ப்புக்குள்ளான கடைகள் பல உள்ளன. அவற்றையும் மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 3 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

    அதன்படி கூடலூர் அத்திப்பள்ளி, காளம்புழா (எண்:8224), லிங்கிபெள்ளி எட்டின்ஸ் சாலை (எண்:8266), ஊட்டி லோயர் பஜார் (எண்:8268) மதுக்கடைகளும் மூடப்பட்டது.கோவை, நீலகிரியில் மட்டும் மொத்தம் 23 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×