search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu protect"

    • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தி.மு.க. மீனவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • எல்லோருக்கும் உயர் படிப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலைஞர் ஆட்சியில் மாவட்டத் தோறும் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டது

    தூத்துக்குடி:

    உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மீனவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் தலைமை தாங்கினார்.

    கனிமொழி எம்.பி

    மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், வட்டச்செயலாளர் டென்சிங், மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் ராபர்ட், கவுன்சிலர்கள் ரெக்ஸிலின், பவாணி மார்ஷல், மெட்டில்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் வரவேற்றார்.

    இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மீனவர் தினத்தையொட்டி நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் தையல்மிஷின், சேலை உள்பட 800 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    நீட்தேர்வு

    மொழியின் மூலம் மருத்துவர்கள் ஆக வேண்டிய மாணவ- மாணவர்களின் எதிர்காலம் நீட் தேர்வின் மூலம் தடைபடுகிறது. எல்லோருக்கும் உயர் படிப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலைஞர் ஆட்சியில் மாவட்டத் தோறும் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டது.தவறான கொள்கையை கடைபிடிக்கும் பா.ஜ.க.வை அனைவரும் புறக்கனிக்க வேண்டும். மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு தந்து விடக்கூடாது.

    தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. திரேஸ்புரம் படகு நிறுத்தும் இடம் விரிவாக்கம், திரேஸ்புரம் கடற்கரை திரேஸ்புரம் சாலை இனிகோநகர் கடற்கரை, ஆகிய பகுதிகளில் ஹை மாக்ஸ் லைட் அமைத்து மற்றும் உங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருகிறேன்.

    மாணவிகளுக்கு

    ரூ. 1000

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ. 1000 வழங்கப்பட்டுள்ளது. எம்.பி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. உங்களோடு நின்று பணியாற்றும் இயக்கம் தி.மு.க. ஓன்றிய அரசோடு சேர்ந்து அ.தி.மு.க. மக்கள் விரோத பறிப்பு செயலில் ஈடுபட வருவார்கள். அதற்கு இடமளிக்க வேண்டாம். தமிழகத்தை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கவும் முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், ஒன்றிய அரசு 2-வது முறையாக பொறுப்பேற்ற பின் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அழிக்கும் வகையில் செயல்படுகிறது. ஓரேநாடு ஓரே மொழி என்பது சாத்தியப்படாது. நாம் தமிழ் பேசுகிறோம். உணவு கலச்சாரம் மாறுப்படுகிறது. மற்ற மொழிகளை பயன்படுத்தி தமிழ் மொழியை அழித்து வேலைவாய்ப்பை பறிக்கிறது. தமிழர்கள் நல்ல முறையில் படித்து உழைப்பின் மூலம் உலகம் முழுவதும் அவர்களது திறமையின் மூலம் வாழ்கின்றனர். சமஸ்கிருத மொழிக்கு ரூ. 640 கோடி ஓதுக்கீடு, தமிழ் மொழிக்கு ரூ. 70 கோடி ஓதுக்கீடு என ஒன்றிய அரசு வேறபாடு காட்டுகிறது என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, மாநகராட்சி மண்டலததலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், மீனவரணி நிர்வாகிகள் பெப்பின், ஜேசையா, மாதவடியான், அந்தோணிராஜ், சந்திரமோகன், ஸ்மைலன், ஜெனிபர், அண்டன் பொன்சேகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி நன்றி கூறினார்.

    ×