என் மலர்
நீங்கள் தேடியது "Tamilisai Soundararjan"
- தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
- தமிழிசை சவுந்தரராஜன் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு சென்றார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விழா மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
விழா மேடைக்கு வந்த முன்னாள் தெலுங்கானா கவர்னரும், தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு சென்றார்.
வணக்கம் தெரிவித்துவிட்டு சென்ற தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து அமித்ஷா பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதில் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதை ஏற்க மறுத்து தான் சொல்வதை கேட்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது போன்று உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய குழு சார்பில் விசாரணை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மத்திய மந்திரி அமித் ஷா மேடையில் வைத்தே தமிழிசை சவுந்தரராஜனிடம் கடுமையாக பேசிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
திருமதி.தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தாரா திரு.அமித்ஷா????
— Prakash Narasimman (@Prakash_2803) June 12, 2024
காட்சி சொல்லும் செய்தி என்ன???? pic.twitter.com/PlGUufGtem






