search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Ministry of Education"

    4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி படிப்பு அங்கீகாரம் பெற சேலம், நாமக்கல் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய கல்வி அமைச்சகம் அழைப்பு
    சேலம்:

    இந்திய அரசின் உயர் கல்வி அமைச்சகம் தேசிய கவுன்சில் வகுத்துள்ளபடி ஆசிரியர் கல்விக்கான 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்பில்  இணைய கல்வி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளது. 

    தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்படி பி.ஏ பி.எட் .,  பி.எஸ்சி. பி. எட்., பிகாம் பி. எட் ஆகிய படிப்புகள் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் பரிசார்த்த அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட உள்ளன. இந்தப் படிப்புகளில்  சேருவதற்கான நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது.

    கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ன் படி இதற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. இதில் ஒரு மாணவர் ஆசிரியர் கல்வியோடு சேர்த்து தனக்கு வேண்டிய கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம் அல்லது வணிகம் ஆகிய சிறப்புத் துறைகளில் பட்டம் பெற உதவுகிறது. 

    இந்த ஒருங்கிணைந்த படிப்பானது அதிநவீன கற்பித்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல், உள்ளடக்கிய கல்வி மற்றும் இந்தியா மற்றும் அதன் மதிப்புகள், நெறிமுறைகள், கலை, மரபுகள் பற்றிய புரிதல் ஆகியவற்றிலும் ஒரு அடித்தளத்தை நிறுவும்.

    கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகாரம், விதிமுறைகள் மற்றும் நடைமுறை) திருத்த விதிமுறைகள், 2021-ஐப் பார்க்கவும். மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி கல்வி அங்கீகாரம் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மே மாதம் 1 -ம் தேதி முதல் மே மாதம் 31 -ந்தேதி (இரவு 11:59 மணி வரை) சமர்ப்பிக்கலாம்.

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட  மாவட்டங்களில்  ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள்  பல இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ×