search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manimutharu Area"

    மணிமுத்தாறு கிராம பகுதிகளில் அடிக்கடி யானை, கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.
    கல்லிடைக்குறிச்சி:

    மணிமுத்தாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிங்கம்பட்டி, திருப்பதியாபுரம், பொட்டல், வேம்பையாபுரம், ஏர்மாள்புரம் ஆகிய கிராமங்களில் அடிக்கடி யானை, கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

    இதனால் அச்சத்தில் இருக்கும் இப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் விலங்குகளை விரட்ட கோரிக்கை விடுத்தனர்,

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரடி, யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து நெல் பயிர்களை சேதப்படுத்தி வந்ததுடன், வாழைகளையும் வேரோடு சாய்த்து அழித்து வந்தது.

     இந்நிலையில் தற்போது மணிமுத்தாறு  குடியிருப்பு பகுதிகளில் புகுந்த சிறுத்தை ஹரிபாபு என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயை தூக்கிச் சென்று கடித்து கொன்று விட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    மேலும் இதேபோன்று மணிமுத்தாறு பழைய குடியிருப்பு பகுதியில் புகுந்த 3 கரடிகள் புதருக்குள் பதுங்கி இருந் ததை கண்ட பொது மக்கள் வனத்துறைக்கு அளித்த தகவலின் படி வந்த  வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்தும், சப்தம் எழுப்பியும் நீண்ட போராட்டத்திற்கு பின் கரடிகளை காட்டுக்குள் விரட்டினர்.

    இவ்வாறு அடிக்கடி காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து தொந்தரவு செய்து வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×