search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nilgiris news நீலகிரி செய்திகள்"

    • ரேலியா-பந்துமி அணைகள் மற்றும் கரன்சி தடுப்பணை ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
    • தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வீதம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    அருவங்காடு,

    குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது.

    இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு ரேலியா-பந்துமி அணைகள் மற்றும் கரன்சி தடுப்பணை ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    பின்னர் அவை ஊட்டி அருகே உள்ள எமரால்டு கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ், சிம்ஸ் பூங்கா அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வீதம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    குன்னூரில் தொடர்மழை காரணமாக ரேலியா அணை நிரம்பியது. இதனால் அங்கு நீர்மட்டம் கொள்ளளவை தாண்டி உள்ளது.

    எனவே வரும் நாட்களில் நகரப்பகுதியில் உள்ள 30 வார்டுகளுக்கும் தடையின்றி 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மலர் கண்காட்சி நிறைவு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது
    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழாவை முன்னிட்டு 124-வது மலர் கண்காட்சி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். 
     
    மலர் கண்காட்சியை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தது. அந்த மலர்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. மேலும் மலர் மாடங்களில் 35 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. 
    இதுதவிர சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மனித உருவங்கள், பொம்மைகள், வேளாண்மை பல்கலைக்க ழக முகப்பு ேதாற்றம் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதனை பார்வை யிடுவதற்கா க கடந்த 20-ந் தேதி முதல் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. 
    குடும்பத்துடன் அங்கு குவியும் சுற்றுலாபயணிகள் மலர்கள் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள். 

    முதல் நாளில் 12 ஆயிரம் பேரும், 21-ந் தேதி 19 ஆயிரம் பேரும், 22-ந் தேதி 25 ஆயிரம் பேரும், 23-ந் தேதி 22 ஆயிரம் பேரும் என 4 நாட்களில் 78 ஆயிரம் சுற்றுலாபயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். 
    மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் இன்று காலை முதலே சுற்றுலாபயணிகள் கூட்டம் அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதியது. குடும்பம், குடும்பமாகவும், குழுவாகவும் அங்கு சுற்றுலாபயணிகள் குவிந்துள்ளனர். 

    மலர் கண்காட்சி நிறைவு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.
     விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்குகிறார். கண்காட்சியில் சிறந்த மலர் அரங்கம், தனியார் பூங்கா, வீடு மற்றும் மாடி மலர் தோட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்படுகிறது. 
    சிறந்த பூங்காவுக்கான கவர்னர் கோப்பை, சிறந்த மலருக்கான முதல்-அமைச்சர் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. 
    ரூ.2.50 கோடியில் திட்ட பணிகள்
    ஊட்டி, 
    கோத்தகிரியில் குஞ்சப்பனை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்தரின் நீர்வீழ்ச்சி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 
    இந்த நீர்வீழ்ச்சியானது சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் உள் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். 
    இந்த நிலையில் வனத்துறையின்‌ கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கேத்தரின் நீர்வீழ்ச்சி குறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டசபையில் பேசினார்.

     அப்போது நீர்வீழ்ச்சியின் தரம் உயர்த்தப்படும், வாகனநிறுத்தம், காட்சி முனை உயர் கோபுர மாடம், நடைப்பாதை நீர்வீழ்ச்சி பாதுகாப்பு வளையங்கள் போன்ற அனைத்து வசதிகளும் ரூ. 2½ கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் விரைவில் நடைமுறைக்கு  கொண்டுவரப்படும்  என்றார்.
    இதை தொடர்ந்து  கோத்தகிரி சுற்றுலா தலங்களில் ஒன்றான கேத்தரின் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலங்களாக மேம்படுத்தும் திட்டத்தில் ரூ.2.50 கோடி செலவில் நடந்து வரும் திட்ட பணிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
    ஆய்வின் போது நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம்,  ஆகியோர் உடன் இருந்தனர்.
    ×