search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் ஆய்வு
    X
    அமைச்சர் ஆய்வு

    கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அமைச்சர் ஆய்வு

    ரூ.2.50 கோடியில் திட்ட பணிகள்
    ஊட்டி, 
    கோத்தகிரியில் குஞ்சப்பனை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்தரின் நீர்வீழ்ச்சி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 
    இந்த நீர்வீழ்ச்சியானது சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் உள் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். 
    இந்த நிலையில் வனத்துறையின்‌ கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கேத்தரின் நீர்வீழ்ச்சி குறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டசபையில் பேசினார்.

     அப்போது நீர்வீழ்ச்சியின் தரம் உயர்த்தப்படும், வாகனநிறுத்தம், காட்சி முனை உயர் கோபுர மாடம், நடைப்பாதை நீர்வீழ்ச்சி பாதுகாப்பு வளையங்கள் போன்ற அனைத்து வசதிகளும் ரூ. 2½ கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் விரைவில் நடைமுறைக்கு  கொண்டுவரப்படும்  என்றார்.
    இதை தொடர்ந்து  கோத்தகிரி சுற்றுலா தலங்களில் ஒன்றான கேத்தரின் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலங்களாக மேம்படுத்தும் திட்டத்தில் ரூ.2.50 கோடி செலவில் நடந்து வரும் திட்ட பணிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
    ஆய்வின் போது நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம்,  ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×