என் மலர்
நீங்கள் தேடியது "Illam thedi kalvi"
- பொது நூலக இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்.
- ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் முழு கூடுதல் பொறுப்பு வகிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
சென்னை:
பள்ளி கல்வித்துறையின் கீழ் வரும் பொது நூலக இயக்குனராக (முழு கூடுதல் பொறுப்பு) ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். அதோடு சேர்த்து, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு பணி அலுவலராகவும் பணிபுரிந்து வந்தார்.
அதையடுத்து கடந்த மாதம் (மே) இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் பணியிடத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், காலியாக இருந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் பணியிடத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் முழு கூடுதல் பொறுப்பு வகிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா நேற்று அரசாணை பிறப்பித்துள்ளார்.
திருப்பூர்:
இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ், தன்னார்வலருக்கான சம்பளம் தாமதமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் தன்னார்வலர்கள் கூறியதாவது:-
இல்லம் தேடி கல்வி திட்டமானது படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக உள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், வறுமையில் உள்ளோருக்கு கூடுதல் வருவாய் அளிக்கிறது.
கல்வித்துறையின் விதிமுறைகளை பின்பற்றி தவறாமல் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறோம். இதற்காக வழங்கப்படும் சம்பளம் நாளுக்கு நாள் தாமதமாகி வருகிறது. கடந்த மார்ச்., மாத சம்பளமே இந்த மாதம்தான் கிடைத்தது. ஏப்ரல் மாத சம்பளம் இன்னும் வரவில்லை.
தற்போது பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் இல்லம் தேடி கல்வியும் நடக்கவில்லை. எனில் இம்மாதம் சம்பளம் வருமா என்பதும் தெரியவில்லை. வழங்குவது ஆயிரம் ரூபாய் என்றாலும் அதை காலம் தாழ்த்தாமல் வழங்கினால் நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






